2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அவருக்காகத் தீச்சட்டி எடுப்பேன் -கஞ்சா கறுப்பு

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

”தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி (EPS)மீண்டும் பெறுப்பேற்க வேண்டும் ”என சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச்  சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வரும்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்றைக்கு அடித்துக் கொள்வோம், நாளைக்கு கூடிக் கொள்வோம் என்பதை போன்று விரைவில் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். தற்போது உள்ள ஆட்சியில் மின்சார கட்டணம் வீட்டு வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. அ.தி.மு.க ஆட்சி அமைந்திருந்தால் இந்த கட்டண உயர்வுகள் இருந்திருக்காது.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் , அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக தெரிவு  செய்யப்பட்டதற்கும், மீண்டும் அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்றும்  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .