Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 10 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோட்டத்து வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் பெண்களைப் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடொன்று உள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த வீடு பூட்டப்பட்டு கிடப்பதை நோட்டமிட்ட இரு பெண்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதே சமயம் 2 பெண்கள் யாராவது வருகிறார்களா ? என்பதை நோட்டமிடுவதற்காக காவலுக்கு வெளியே இருந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், இரு பெண்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருப்பதை கண்டு குறித்த வீடு நோக்கி வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்கள் வீட்டுக்குள் திருடிக்கொண்டிருந்த பெண்களுக்கு சிக்னல் கொடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த இரு பெண்களையும் மறித்த அவர், நீங்கள் யார் ? வீட்டுக்குள் எப்படி சென்றீர்கள் ? என்று விசாரித்துள்ளார்.
உடனடியாக அந்த இரு பெண்களும் தங்கள் அணிந்திருந்த சேலையை சரியவிட்டதோடு ஆடைகளை களைந்து அந்த இளைஞரின் கவனத்தை திசை திருப்ப முயன்றுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் இருக்க அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் உஷாரானதால், தங்கள் ஆடைகளை எடுத்துக் கொண்டு இரு பெண்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
எனினும் உரிமையாளரின் சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரட்டிச்சென்று 2 பெண்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்திவல் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ”தீரன் திரைப் படத்தில் வருவது போல பகல் நேரத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும், ஆள் நடமாட்டமில்லாததால் பகலிலேயே கைவரிசை காட்டுவதும் தெரிய வந்துள்ளது.
அத்துட திருடச்செல்லும் இடங்களில் தங்களை ஆண்கள் யாராவது பிடித்தால், அவர்களது கவனத்தை திசை திருப்ப தமது ஆடைகளை களைந்து காட்டி தப்பிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இரு பெண்களையும் கைது செய்துள்ள பொலிஸார் தப்பியோடிய இரு பெண்களையும் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago