A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தி
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட முதியவர் முஹம்மது ஷெரீப் தற்போது நோய்வாய்ப்பட்டு வறுமையால் மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல் தவிக்கிறார்.
கடந்த 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருது அந்த முதியவருக்கு வழங்கப்படவில்லை. சாவின் பிடியில் இருக்கும் அந்த முஹம்மது ஷெரீப் பத்மஸ்ரீ விருதைத் தனது மார்பில் சுமக்கும் தருணத்தை உணராமல் உயிரிழந்துவிடுவாரோ என குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர்.
அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி அலி பெக் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (வயது83). சைக்கிள் மெக்கானிக்காக பணியாற்றிவரும் இவர் கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஆதரவற்றவர்கள் உயிரிழந்தால் அவர்களைத் தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்து வருகிறார்.
இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை முஹம்மது ஷெரீப் தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்துள்ளார். முஹம்மது ஷெரீப்பின் தன்னலமில்லாத சேவைப் பார்த்த மத்திய அரசு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ஆனால், மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருது இதுவரை முஹம்மது ஷெரீப்புக்கு வழங்கப்படவில்லை. முஹம்மது ஷெரீப் முதுமையால் தற்போது நோய்வாய்ப்பட்டு, வறுமையால் மருத்துவச் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிக்கிறார்.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago