Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 28 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக கைதுசெய்யப்பட்ட 19 வயது பொறியியல் மாணவி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்தசம்பவத்தை தொடர்ந்து, இதனிடையே சர்ச்சைக்குரிய பதிவிற்காக சிங்காட் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரி அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கியது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டதற்கும் கல்லூரியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும் அந்த மாணவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கௌரி கோட்சே தலைமையிலான அமர்வு, உடனடியாக மாணவியை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேலும், "ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தியதால் அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படிதான் அழிப்பீர்களா? உங்களால் ஒரு மாணவியின் வாழ்க்கை பாழாகிவிட்டது. மாணவியின் வாழ்க்கையில் விளையாட அரசும், கல்லூரி நிர்வாகமும் யார்? என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட நீதிபதிகள் மகாராஷ்டிர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
5 minute ago
13 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
25 minute ago
27 minute ago