2025 ஜூலை 19, சனிக்கிழமை

இந்தியாவுக்கு நான்காம் இடம்

Freelancer   / 2023 ஜூலை 02 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் நடத்தப்பட்ட மொழிகள் குறித்த ஆய்வின் படி உலகளவில் 7 நாடுகளில் அதிக மொழிகள் மற்றும் பண்பாடுகள் உள்ளனவென மொழிகளை ஆய்வு செய்யும் எத்னலோக் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பசிபிக்கடலில், சுமார் 4,62,840 கிலோ மீட்டர் பரப்பளவுடன் தீவு நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக பப்புவா நியூ கினி உள்ளது. இங்கு டொக்பிசின்,  கிரி மற்றும் மோட்டு என இந்த 3 அதிகாரப் பூர்வ மொழிகளுடன்  840 மொழிகள் பேசப்படுவதோடு உலகளவில் அதிக மொழி பேசும் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளவில் அதிக மொழி பேசும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா உள்ளது. இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இந்தோனேசியன் இருந்தாலும், இந்நாட்டில் மொத்தம் 715 மொழிகள் பேசப்படுகிறது.

பட்டியலில் மூன்றாம் இடத்தில் நைஜீரியா உள்ளது. 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நைஜீரியா, ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு மற்றும் அதன் மிகப் பெரிய ஜனநாயகம் நாடாக உள்ளது.

பல கலாசாரங்கள் மற்றும் மொழிகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எத்னோலாஜின் படி, இந்தியா பட்டியலில் 456 மொழிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடான சீனாவில் 307 மொழிகள் பேசப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் 279 மொழிகள் அந்நாட்டின் பூர்வீக மொழிகளாக உள்ளது உலகளவில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X