A.K.M. Ramzy / 2021 மார்ச் 14 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் 61ஆவது வயதில் இன்று (14) காலமானார்.
கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‛இயற்கை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதனைத் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கம்யூனிச சித்தாந்தத்தை விரும்பும் ஜனநாதன் தன் படங்களில் சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருப்பார். தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ‛லாபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கான 'எடிட்டிங்' பணியில் இருந்த ஜனநாதன் இரு தினங்களுக்கு முன்னதாக மதியம் சாப்பிட வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டார். மாலை 3:30 மணி ஆகியும் அவர் திரும்பாததால், அவரது உதவியாளர்கள் வீட்டுக்குச்சென்றுள்ளனர்.
அப்போது கதவு திறந்திருக்க, சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் முயற்சியால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சுயநினைவின்றி இருந்த அவர், இன்றுக் காலை மாரடைப்பால் காலமானார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago