Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 02 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக் காலமாகத் தமிழக மக்கள் மத்தியில், ‘ Blood Art ‘ எனப்படும் இரத்தத்தில் ஓவியங்கள் வரைந்து அதனை விரும்பியவர்களுக்குப் பரிசளிக்கும் கலாசாரம் அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக இதனைத் தொழிலாக மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக, வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மனிதர்களின் இரத்தத்தில் ஓவியம் வரைவதால் HIV உட்பட பல வகையான தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் , எனவே மக்கள் இவ் விடயத்தில் அலட்சியமாகச் செயற்பட வேண்டாம் எனவும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஓவியத்திற்காக எடுக்கப்படும் இரத்தம் என்பது முறையான பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் இரத்தம் எடுக்க பயன்படுத்தப்படுகிற ஊசியினை எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது.
மேலும் குறித்த இரத்தத்தை திறந்த நிலையில் படம் வரைவதற்கு கையாளும்போது, அவ் இரத்தம் எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது, பலரையும் பாதிப்புக்குள்ளாக்கும்.
மேலும் இவ் ஓவியம் வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. ஒருவருடைய இரத்தத்தை எடுத்துத்தான் வரைய வேண்டும் என்று இல்லை. இரத்தம் என்பது பல உயிர்களை காக்கிற புனிதத் தன்மையுடையது.
இரத்ததானம் செய்வது என்பது இன்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றாலும், அந்த இரத்தத்தை எடுத்து படம் வரைந்து வீணாக்குவது என்பது சரியான செயல் அல்ல” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .