2025 ஜூலை 19, சனிக்கிழமை

இறந்தவரின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வர சிறப்பு பூஜைகள்

Janu   / 2023 ஜூன் 22 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல் நத்தம் கிராமத்தில் விபத்தொன்றில் இறந்துபோன 20 வயதான இளைஞனின் ஆவியை வீட்டுக்கு அழைத்துவர சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

படித்து முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருந்த அந்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த​ லொறியுடன் மோதி மரணமடைந்தார்.   அவரது உடலை உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இறந்து போனவரின் ஆவியை ஏரிக்கரையில் இருந்து,  வீட்டுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்தனர். அவரது ஆவியை வீட்டுக்கு அழைத்து வர ஏரிக்கரையில் சிறப்பு பூஜை செய்தனர்.

அங்கு பூங்கரகம் வைத்து, தரையில் மஞ்சள்-குங்குமம் மற்றும் மலர்கள் தூவி பம்பை மேளங்கள் முழங்க சிறப்பு பூஜை நடந்தது. ஏரிக்கரையில் இருந்து பூங்கரகத்தை  ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மஞ்சள் நீர் தெளித்தப்படியும், பூக்கள் தூவியப்படி சென்றனர்.  

அவரது உருவப்பட்டத்திற்கு மாலை அணிவித்து வீட்டிலும் பம்பை மேளம் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டது. இறந்த மகனின் ஆவி தன்னுடன் வாழ வேண்டும் என்று நம்பிக்கையில் பெற்றோர்கள் நடத்திய இந்த பூஜை அந்த கிராம மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:- இறந்துபோனவரின் ஆவி வீட்டுக்கு வர வழி இல்லாமல் சுற்றித்திரியும். வீட்டுக்கு செல்வதோடு, தாய்-தந்தை உள்ளிட்ட உறவினர்கள் காண முடியாமல் இறந்தவரின் ஆவி துடிக்கும். இதனை கருத்தில் கொண்டு, இறந்தவர் ஆவி வீட்டிற்கு அழைத்து வந்தால், அவரது ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கையாகும் என்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X