2026 மார்ச் 07, சனிக்கிழமை

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு..க., வினருக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு பல்லடம் ,மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தில் ம.தி.மு.க, பொது செயலாளர் வைகோ தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையெழுத்திட்டனர். மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் எதிரணி வேட்பாளர்களாக அதிமுகவினர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் என்ற தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் சிதம்பரம் தொகுதி விசிக.,வினர் கேட்டு வருகின்றனர். இதனால் விசிகவினர் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீட்டித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி போட்டியிடும் மூன்று இடங்களிலும் அ.தி.மு.க., போட்டியிடுகின்றன. திமுககூட்டணியில் போட்டியிடும் மற்றொரு கட்சியான ஆதி தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவிநாசி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் சபாநாயகர் தனபால் போட்டியிடுகிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .