2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உதயநிதிக்கு புதிய பதவி ?

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

 தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் உதயநிதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டெல்லியில் பேசப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, தற்போது அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ளார். சென்னையில் முதலமைச்சர் தலைமையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஜெய் ஷா பங்கேற்றார். அப்போதுதிராவிட முன்னேற்ற கழக குடும்பத்தின் ஒரு முக்கிய நபரை ஜெய் ஷா சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்,ஒரு பிரபல தொழிலதிபர். தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இந்த தொழிலதிபர் ஒரு பாலமாக திகழ்கிறார். ஆனால், ஒரு அரசியல்வாதி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முடியுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .