Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில், நபர் ஒருவர் தனது உறவினர் ஒருவரின் காருக்குத் தீ வைத்துள்ள நிலையில், அருகே இருந்த 20 கார்களுக்கும் தீப்பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினத்தன்று நள்ளிரவு வேளை டெல்லி சுபாஷ்நகரில் உள்ள ஒரு தனியார் கார் நிறுத்தத்துக்குச் சென்ற குறித்த நபர், அங்கிருந்த தனது உறவினரின் காருக்குத் தீ வைத்துள்ளார்.
இதன் போது எதிர் பாராத விதமாக அருகில் இருந்த கார்களுக்கும் தீ மலமலவெனப் பரவிய நிலையில் சுமார் 20 கார்கள் தீக்கிரை ஆகின
இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், CCTV கெமராவின் உதவியுடன் குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ”தனது உறவினரைப் பலிவாங்கவே இவ்வாறு செய்ததாகவும், எதிர் பாராத விதமாக ஏனைய கார்களுக்கும் தீப் பரவியதாகவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .