2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஊரைக் கூட்டி ஆலமரத்திற்குத் திருமணம்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண் ஒருவர் ஊரைக் கூட்டி ஆலமரத்திற்குத்  திருமணம் செய்துவைத்த விநோத சம்பவம் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள மேமாரி என்ற நகரத்தைச் சேர்ந்தவர் ரேகா தேவி. இவர் தனது மகனாக நினைத்து  நீண்ட காலமாக ஆலமரமொன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மரத்திற்குத்   திருமணம் செய்து வைக்க வேண்டும் என  எண்ணிய அவர்,  அண்மையில் தனது நண்பர்களையும் அக்கம்பக்கத்தினரையும் அழைத்து  பாரம்பரிய முறைப்படி அம்மரத்திற்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதன்போது பூசாரி மரத்திற்கு புடவை-வேட்டியை அணிவித்து, அதன் உச்சியில் வர்ணம் பூசினார் . இதனைக்காண ஏராளமான உள்ளூர்வாசிகள் அங்கு  கூடினர்.

இச்சம்பவமானது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X