2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒன்றரை இலட்சத்துடன் மரமேறிய குரங்கு

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேச மாநிலம் சாஹாபாத் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலுவலகத்தின் வெளியே சராபத் ஹுசைன் என்பவர் தனது பைக்கை நிறுத்தியுள்ளார். அந்த பைக்கில் பை ஒன்றும் அதில் 1.5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் இருந்துள்ளது.

இவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகே சென்ற நேரம் பார்த்து அங்கிருந்த குரங்கு ஒன்று பைக் அருகே வந்து நோட்டமிட்டது. பின்னர் பணம் இருந்த பையை தூக்கிக்கொண்டு ஓடியது. இதை பைக்கின் உரிமையாளர் சராபத் மற்றும் அங்கிருந்தவர்கள் கவனித்துவிட்டனர். பதறிப் போன சராபத் குரங்கு எங்கே சென்றது என மூச்சிரைக்க ஓடி தேடினார்.

பின்னர் தான் மாயமான அந்த குரங்கு அருகே உள்ள மரத்தில் ஏறிக்கொண்டது தெரிந்தது. பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பின் அதனிடம் இருந்த பையை மீட்டு எடுத்தார் சராபத்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X