Editorial / 2024 ஜூன் 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

என்னுடைய வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது என முன்னாள் முதலமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) கூறியுள்ளார்.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம், ஞாயிற்றுக்கிழமை (02) சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “நடைபெற்று முடிந்திருக்கக்கூடிய இந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடைபெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
வெற்றி கூட்டணியில் இருப்பதாக கூறுகிறீர்கள் உங்களுக்கான பலன் தற்போது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், “பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் நான் அல்ல. கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது” என்றார்.
உங்களை விரைவில் மத்திய அமைச்சராக பார்த்து விடலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது. இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் நாட்டு நடப்புகளை அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்புக்குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் எப்படி இந்த கட்சி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் அது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.
17 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago