2021 ஜூலை 31, சனிக்கிழமை

குடியுரிமைச் சட்டம்; கேரள அரசு உச்ச நீதிமன்றில் மனு

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்தச் சட்டத்தைத் 

திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர்  பினராயி விஜயன் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

குடியுரிமைச் சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

பினராயி விஜயன் கொண்டு வந்த இந்த தீர்மானம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.  

பா.ஜனதாவின் ஒரே உறுப்பி னரான ராஜகோபால் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசினார்.

இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது.

தற்போது குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக உச்ச நீதிமன்றை  நாடிய முதல் மாநிலமாக கேரள அரசு மாறியுள்ளது. குடியுரிமை (திருத்த) சட்டம் 

அரசமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு உச்ச நீதிமன்றை அணுகி யுள்ளது.

இந்திய அரசமைப்பின் 131-வது பிரிவின் கீழ் கேரள அரசு இந்தமனுவை தாக்கல் செய்து உள்ளது. 

அரசமைப்பின் கீழ், மத்திய அரசின்  அதிகாரங்களைக் குறைமதிப்பதற்கு உட்படுத்தும் அல்லது ‘தடைசெய்யும்’ எந்த நடவடிக்கையும்

எடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம்  இல்லை. எந்தச் சட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், அவை எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசே மாநிலங்களுக்கு சொல்கிறது.

எவ்வாறாயினும், அரசமைப்பின் 131-வது பிரிவின் கீழ், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான எந்தவொரு தகராறுக்கும் இடையில் காலடி எடுத்து வைக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றம் வழங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை  திருத்த சட்டம்  14 (சமத்துவ உரிமை), 21 (வாழ்க்கை உரிமை மற்றும் 

தனிப்பட்ட சுதந்திரம்) மற்றும் அரசமைப்பின் பிரிவு 25 (மதச் சுதந்திரம்) மற்றும் மதச்சார்பின்மையின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை மீறுவதாகும்.

ஆகவே குடியுரிமை (திருத்த) சட்டம்  அரசமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி கேரள அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .