A.K.M. Ramzy / 2021 மார்ச் 14 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே, காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும் திமுக காங்கிரஸ் கட்சியை நடத்தும் விதம் வருத்தத்தை அளிப்பதாகவும் கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேதனைய டைந்ததாக தகவல் வெளியானது.
மார்ச் 11அம் திகதி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளை எவை என்பது முடிவானது. அதிலும் கூட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர் வெளியிட்ட ட்வீட்டுக்கள் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிக் குழப்பம் இருப்பதை உறுதிப்படுத்தியது.
மேலும், கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது மட்டுமன்றி, கூட்டணி கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.இந்நிலையில் கடும் அதிருப்தி, போராட்டத்துக்கு இடையே காங்கிரஸ் கட்சி தங்களுடைய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago