Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 மே 25 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 வயதான சிறுமி தனது 18 வயதான காதலனுடன் உல்லாசமாக இருந்ததையும் பார்க்கக் கூடாததையும் பார்த்துவிட்டதாக தனது 9 வயதான சகோதரியான சிறுமியை துண்டு துண்டாக வெட்டி ஆசிட் ஊற்றி கொன்றக் குற்றச்சாட்டின் கீழ் 13 வயது சிறுமி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நாளன்று, அவர்களுடைய பெற்றோர், வேறு ஊருக்கு திருமண நிகழ்வுக்குக் சென்றுவிட்டனர். வீட்டில் இரண்டு சிறுமிகள் மட்டுமே இருந்து உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பீகார் மற்றும் வைஷாலி மாவட்டத்தின் ஜந்தாஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹர்பிரசாத் கிராமத்தில் வசித்து வந்த 9 வயது சிறுமி கரீனாவை கடந்த 16 ஆம் திகதி முதல் காணவில்லை.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்து உள்ளனர். பொலிஸார் தேடுதல் வேட்டையில், வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில், மிகவும் மோசமான நிலையில், அச்சிறுமியின் உடலை பொலிஸார் கண்டெடுத்தனர்.
சிறுமியின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது. மேலும் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு இருந்தது. அடையாளம் தெரியாத சிறுமியின் சடலத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.
கொலையாளிகள் சிறுமியின் கைவிரல்களை வெட்டி, உடலில் ஆசிட் ஊற்றி எரிக்க முயற்சித்து உள்ளனர். அந்த அப்பாவி சிறுமியின் தந்தை கூலி வேலை செய்து வந்தவர், வேலைக்காக வீட்டை விட்டு வெளியூர் சென்று வந்தார்.
இதுகுறித்து வைஷாலி பொலிஸ் சூப்பிரெண்டு ரவி ரஞ்சன் குமார் கூறியதாவது:-
இந்த வழக்கை விசாரித்தபோது, கரீனாவின் 13 வயது மூத்த சகோதரியின் நடத்தையில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர் ரகசியமாக கண்காணிக்கப்பட்டார். அவர் மொபைல் கால் டேட்டாவை சோதனை செய்து பார்த்த போது உண்மை தெரிய அவ்ந்தது. பொலிஸார் அவரை அழைத்து சென்று விசாரித்ததில், உண்மை தெரியவந்தது.
அவர் 18 வயது இளைஞனை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் திகதி பெற்றோர் வேறு ஊருக்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். வீட்டில் இரண்டு சிறுமிகள் மட்டுமே இருந்து உள்ளனர்.
பெற்றோர் வீட்டில் இல்லாததால், மூத்த சகோதரி தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்தபோது அதனை அவருடைய தங்கை பார்த்து விட்டார். தங்களைப் பற்றி பெற்றோரிடம் கூறிவிடுவார் என நினைத்து 13 வயது சகோதரி தனது காதலனுடன் சேர்ந்து 9 வயது சகோதரியைக் கொலைச் செய்து உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் மாமியாரும் அவர்களுக்கு உதவி உள்ளார். சிறுமியை கொன்றுவிட்டு உடலை பெட்டியில் போட்டுள்ளனர். மூன்று நாட்கள் வீட்டில் வைத்து இருந்துள்ளனர். இறந்தவரை அடையாளம் தெரியாத வகையில் சிறுமியின் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது. பின்னர், கால்கள் மற்றும் கைகள் துண்டிக்கபட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
4 hours ago
01 Jun 2023