Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 08 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6,000ஐ நெருங்குகிறது. இதில் கேரளா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி சனிக்கிழமை (7) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு 1,806 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து குஜராத் 717, டெல்லி 665, மேற்கு வங்கம் 622, மகாராஷ்டிரா 577, கர்நாடகா 444, உ.பி. 208, தமிழ்நாடு 194, புதுச்சேரி 13, ஹரியானா 87, ஆந்திரா 72, ம.பி 32, கோவா 9 என்ற எண்ணிக்கையில் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போது பரவும் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஐசிஎம்ஆர் தலைவர் ராஜீவ் பெஹல் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago