Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலபுரகி
கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 8.06 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளதென தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர். இதனால்,ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
இதேவேளை,கடந்த ஞாயிற்று கிழமை கர்நாடகாவின் குல்பர்கா நகரில் காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி இருந்தது. இதனால், கடந்த 2 நாட்களில் கர்நாடகாவின் குல்பர்காவில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்திள்ளது.
1 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago