2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கல்யாண ராணி வசமாக மாட்டினார்

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைத்தன்யா. ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். 33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார் அசோக் சைதன்யா. பெற்றோரின் அறிவுறுத்தலின்படி தெலுங்கு மேட்ரிமோனியில் தனது சுய விவரத்தை பதிவேற்றம் செய்ததாகவும் தெரிகிறது.

அதே வலைதள பக்கத்திலிருந்த ஆந்திர மாநிலம் வெங்கட்ராமன் என்பவரின் மகள் ஷ்ரவண சந்தியா என்பவரை அசோக் சைதன்யாவுக்கு பிடித்து போக இருவரும் பேசி வந்தனர். இந்நிலையில் தனது புகைப்படம் எனக் கூறி சினிமா நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார் சந்தியா.

புகைப்படத்தை பார்த்து அழகில் மயங்கிய அசோக் சைதன்யா, சந்தியா கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். பல தவணைகளில் 9 இலட்சம் ரூபாய் பணத்தையும், 65 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் வாங்கி கொடுத்துள்ளார். நன்றாக பேசி வந்த சந்தியா, திருமணம் குறித்து பேசும்போது மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு அசோக் சைதன்யா வற்புறுத்த அவரது தொலைபேசி எண்ணை பிளாக் செய்துள்ளார். சந்தேகம் அடைந்த அசோக் சைதன்யா ஆவடி காவல் ஆணையரகத்தில் இணையவழி குற்ற பிரிவில் புகார் அளித்தார்.

இந்தப் பெண் இவ்வாறு பலரை cயுள்ளமை தெரியவந்துள்ளதுடன், பொலிஸார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X