Freelancer / 2023 ஜூன் 29 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப்பிரதேச மாநிலம் ஜகாங்கிராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராம் ஒன்றில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை இருவருக்கும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு தனது மாமியார் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் ஊரை விட்டு வெளியேறி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பாக கள்ளக் காதல் ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு முன்பாக மீண்டும் தன் கணவரின் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், கணவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.
இருப்பினும், தனக்கு துரோகம் செய்ததாக கருதி ஆண் நண்பர் மீதான கோபம் அந்த பெண்ணுக்கு தணியவில்லை. இந்நிலையில் பிரிந்துசென்ற கள்ளக் காதலன் பெண்ணின் வீட்டிற்கு ரகசியமாக கடந்த திங்களன்று வந்து, உறவு கொள்ளுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். அவர் மீது ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த காதலி, கூர்மையான ஆயுதத்தால் கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டினார். அலறி துடித்த அந்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அப்பெண் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
14 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
1 hours ago