2025 ஜூலை 19, சனிக்கிழமை

கழிவுநீர் தொட்டியில் இறக்கினால் 5 ஆண்டு சிறை

Janu   / 2023 ஜூன் 19 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். விதிகளை மீறினால் கழிவுநீர் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர்   கழிவுநீர் தொட்டியை இயந்திரங்களை கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். இச்சட்டப்படி எந்த ஒரு நபரோ, உள்ளாட்சி அமைப்போ அல்லது எந்த ஒரு நிறுவனமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு பணியாளரையும் அபாயகரமான கழிவுநீர் கட்டமைப்புகள் அல்லது கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

இதை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் அப்பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர் அல்லது ஒப்பந்ததாரர் அல்லது பணியில் அமர்த்தியவர் மீதும் சட்டம் பாயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X