A.K.M. Ramzy / 2021 மார்ச் 16 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்தியென விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவிதார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வில்லை.
விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்கு காங்கிரஸில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆகி வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுக்கு விஜயதரணி செல்லப் போவதாகத் தகவல் பரவியது. இது குறித்து அவா் கூறியது:
விளவங்கோடு தொகுதியை எனக்குக் கொடுக்கக் கூடாது என்று 10 பேர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், அத்தொகுதியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களின் கருத்து என்ன என்பதுதானே முக்கியம். இதை தலைமை அறியாமலா இருக்கும். எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் தலைமை தரும். காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்திதான் என்றார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago