A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
3ஆவது அணியில் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு எங்களுடன் பேச்சுவார்த் தை நடத்தியது உண்மை தான். வதந்தி என்று அவர்கள் சொல்கிறார்கள். இல்லை என்று நான் சொல்கிறேன் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை தங்கச்சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-
3ஆவது அணி வென்றதாக சரித்திரமே இல்லை என்று சொல்லி கொண்டு, ‘ப.சிதம்பரம் அண்டு சன்ஸ்' செய்தி அனுப்புகிறார்கள் காங்கிரஸில் வந்து சேருங்கள் என்று அழைக்கின்றனர். வெல்லாத கட்சியை எதற்காக அப்படி அழைக்கிறீர்கள்?
‘நாமே தீர்வு' என்று நாங்கள் சொன்னால் 'ஒன்றிணைவோம் வா' என்று சத்தம் மாறாமல் சொல்கிறார். இல்லதரசிகளுக்கு ஊதியம் என்ற கருத்து கோட்பாடை முதல் கட்சியாக நாங்கள் தான் அறிவித்தோம்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சியில் 50 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றோம். அதையே ஆண்டுக்கு 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவிக்கிறார். இரண்டும் ஒன்று தானே. 7 உறுதி மொழிகள் உட்பட அத்தனையும் எங்களைப் போல் பின்பற்றுகிறார்.
அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago