2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காந்தி சிலைக்கு முன் பிரியங்கா காந்தி மௌன விரதம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக்கக் கோரி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மௌன விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

லக்னோவிலுள்ள காந்தி சிலைக்கு முன்னால் காங்கிரஸ் தலைவர்களுடன் பிரியங்கா காந்தி மௌன விரதத்தில் ஈடுபடு வருகிறார்.

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3ஆம் திகதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. 

இதில், சில விவசாயிகள் உயிரிழந்ததுடன், தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது பதவியை இராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .