A.K.M. Ramzy / 2021 மார்ச் 16 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜ்கோட்,
குஜராத்தின் 4 முக்கிய நகரங்களில் நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.7 இலட்சத்துக்கும் கூடுதலாக உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக குஜராத்தில் 800க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. குஜராத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை முன்னிட்டு தொற்றைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கை அமுல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, மார்ச் 17ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஆமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago