2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குடும்ப தலைவிகளுக்கு மாதாந்தம் 1,000 ரூபாய்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  1,000 ரூபாய் தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அண்மையில் 1,000 ரூபாய்  உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு  ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் காரணமாக புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூபாய்.1,000 வீதம் வழங்கப்படவுள்ளது” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .