2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொரோனாவால் மரணித்த மனைவிக்கு கோயில்

Freelancer   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர் கொரோனாவால் மரணித்த தனது மனைவியின் நினைவாக கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்.

ஷாஜபூரில் இருந்து  3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தைச் சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் அவரின் மனைவியான கீதாபாய் என்பவருக்கே கோயிலைக் கட்டியுள்ளார்.

மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், அவரது உருவிலான சிலை நிறுவி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.  

கோயிலில் கீதாபாய் சிலையை அமைப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைத்து சடங்குகளையும் செய்ததுடன், அவர்கள் தினமும் சிலையை வணங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X