2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொரோனா காதல் அண்டாவில் மிதந்தது (வீடியோ)

Editorial   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆலப்புழா

சமையல் செய்யும் பாத்திரத்தைத் தோணியாகப் பயன்படுத்தி கோயிலுக்குள் சென்ற ஆலப்புழாவைச் சேர்ந்த காதல் ஜோடியினர் திருமணம் செய்து அசத்தியுள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் அம்பலப்புழா நகரைச் சேர்ந்த ஐஸ்வர்யா, தகழி நகரைச் சேர்ந்த ஆகாஷ் ஆகியோரே தடைகளைத் தகர்த்து திருமணம் செய்தனர்.

கொரோனா காலத்தில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டபோது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டபோது காதல் மலர்ந்தது.

ஆலப்புழா மாவட்டம் தாளவாடி பண்ணையூர்காவு கோயலில் நேற்றுமுன்தினம் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால், குடும்பத்தினர் எதிர்த்த காரணத்தினால், கடந்த 5ஆம் திகதியே பதிவுத் திருமணம் செய்துகொண்டாலும் முறைப்படி கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டித் திருமணம் செய்ய இருவரும் விரும்பினர்.

எனினும், வெள்ளநீர் சூழ்ந்து கோயிலுக்குள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திருமணத்தை வேறு நாளில் நடத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், ஆகாஷ், ஐஸ்வர்யா இருவரும் வேறு நாளில் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. நிச்சயக்கப்பட்ட நாளில் கோயிலுக்கு எப்படியாவது வருகிறோம், திருமணம் நடத்தித்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து கோயில் சார்பில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அலுமினியப் பாத்திரத்தை தோணியாகப் பயன்படுத்தி திருமண ஜோடி அழைத்து வரப்பட்டது.

காதல் திருமணத்துக்கு உறவுகளால் ஏற்பட்ட தடையையும், இயற்கையால் உருவான தடையையும் தகர்த்து சமையல் பாத்திரத்தில் அமர்ந்து வந்து இந்த ஜோடி திருமணம் செய்தது கேரளாவில் வைரலாகி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .