Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பழனி
தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை தொடங்கியது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இதனை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது.
ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து விளம்பரபலகை வைக்கப்பட்டு அதில் எந்த அர்ச்சகர் இதனை செய்ய உள்ளார் என்பது குறித்த பெயர் மற்றும் செல்போன் எண் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுத்தப்பட உள்ளது.
முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனிக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தினசரி ஆயிரக்கணக்கான அளவில் வந்து செல்கின்றனர். மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சற்று குறைந்துள்ளது.
பழனியில் இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கம் போல் பழனி மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
40 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago
4 hours ago