Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்னோ,
ராகுல் காந்தி உள்ளிட்டோர் லகிம்பூர் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விவசாயிகள் மீது பாரதிய ஜனதா கட்சியினர் காரைக் கொண்டு மோதியதில் மொத்தம் 9 விவசாயிகள் பலியாகினர். இந்த வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், மேலும் சிலரும் சீதாப்பூரில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தீபேந்திர ஹூடா ஆகியோரை பார்வையிட, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு லகிம்பூர் மாவட்டம் செல்ல ஏற்பாடாகி இருந்தனர். இதன்போது,உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு, காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியது. ஆனால், சிறிது நேரத்திலேயே ராகுல் காந்தி உள்ளிட்டோர் லகிம்பூர் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025