A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிருஷ்ணகிரி:
தமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்த போது 2 கார்களில் தீ விபத்து நேரிட்டது.
கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சசிகலாவின் வரவேற்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஒருபுறம் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அங்கிருந்த தொண்டர்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கார்களுக்கு அருகில் இருந்த கார்களை அப்புறப்படுத்தினர். இதனால் அருகிலுள்ள மற்ற கார்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சசிகலாவை வரவேற்க வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடிக்க அமமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பட்டாசுகள் ஏற்றப்பட்டிருந்த காரில், சாலையில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு தீ விபத்து நேரிட்டதால், அருகருகே இருந்த இரண்டு கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago