A.K.M. Ramzy / 2021 மார்ச் 09 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி,
சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
புதுவை, தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6அம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி புதுவை மற்றும் காரைக்கால் பிராந்தியத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டபொலிஸ் அதிகாரிகள் மட்டத்தில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மது கடத்தலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழக மாவட்டமான கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்ட கலெக்டர்கள், பொலிஸ் சூப்பிரண்டுகள் ஆலோசனை கூட்டம் புதுச்சேரியில் நடந்தது.
இதில் புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க், விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, கடலூர் கலெக்டர் சந்திரசேகர சாகமூரி, பொலிஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன் (விழுப்புரம்), ஸ்ரீஅபிநவ் (கடலூர்), புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago