2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சந்தேகம் தீர்த்து வைத்த மாணவி பலாத்காரம்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 09 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி மாணவியொருவரை இளைஞர் ஒருவர்  பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர். 27 வயதான இவர் சொந்தமாக மரக்கடையொன்றை நடத்தி வந்துள்ளார்.

அதே சமயம் அப்பகுதியில் 23 வயதான இளம்பெண் ஒருவர் கல்லூரில் பி.எட் இரண்டாம் ஆண்டு கற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று குறித்த யுவதியிடம் தனது கணினியில்  சில சந்தேகம் இருப்பதாகவும் தனக்கு உதவிசெய்யுமாறும் கேட்டுள்ளார்.

இதனை நம்பி அக்கடைக்குச் சென்ற யுவதிக்கு அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அருந்தக் கொடுத்துள்ளார். பின்னர் அவர் மயங்கியதும் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து, குறித்த வீடியோவை இணைத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி பலமுறை அவரைப் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட யுவதி தனது தாயாரிடம் கூற  அவர் அப்பெண்ணை தனது தாய்மாமனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து திருமணத்தில் கிடைத்த மொய்பணம் 2 ,40,000 மற்றும் 11 பவுன் நகைகளைத் தன்னிடம் தரவேண்டும். இல்லாவிட்டால் தன்னோடு இருக்கும் வீடியோவை ரிலீஸ் செய்துவிடுவேன் என மீண்டும் அவரை சுரேந்தர் மிரட்டியுள்ளார்.

அச்சமடைந்த யுவதியும் அவர் கேட்ட அனைத்தையும் வழங்கியுள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுரேந்தர் மீண்டும் அவரை பலாத்காரம் செய்து உள்ள நிலையில்  அப்பெண்ணின் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இப்புகாரினையடுத்து சுரேந்தரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .