2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிகிச்சை முடிந்து விரைவில் வீடு வருவார்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 01 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

சிகிச்சை பெற்ற  நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்த பின்னர் வீடு வருவாரென அறிவிக்ப்பட்டுள்ளது. அவருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 அண்மையில் ரஜினிகாந்த்துக்கு ஏற்பட்ட திடீர் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார். இருப்பினும், ரஜினிக்கு இரவு முழுவதும் அதிதீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

அவருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. மேலும், அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என்றும் இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .