2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறுத்தையை பிடித்து கட்டிய இளைஞன்

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா மாநிலத்தில் பலரையும் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை, இளைஞர் ஒருவர் உயிருடன் பிடித்து, பைக்கில் கட்டி, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பாகிவாலு (Bagivalu) என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. இந்நிலையில், விவசாயி வேணுகோபால்   தனது  நிலத்திற்கு சென்றார்.

அப்போது மறைந்திருந்த சிறுத்தை வேணுகோபாலை தாக்கியது. இந்த தாக்குதலின் போது வேணுகோபாலின்  கை, கால்கள் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. எனினும் அசராத அவர், சிறுத்தையை எதிர்த்து போராடினார். மேலும், சிறுத்தையின் காலை கயிறு கொண்டு கட்டிய அவர், அதை தனது பைக்கில் கட்டிக் கொண்டு தனது கிராமத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து   சிறுத்தையை எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X