2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிவசேனா அமைப்பின் முக்கியஸ்தர் இலங்கை செல்கிறார்

Editorial   / 2023 ஜூலை 17 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவசேனா அமைப்பின் தமிழ்நாடு மாநில செயல் தலைவர் க.சசிகுமார்ஜீ, நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜூலை 18ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். .

பிரம்மரிஷா மலை அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் உட்பட தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள், குருமகா சன்னிதானங்கள், ஞானவான்கள், சித்தர்கள், சிவாச்சாரியார்கள், உட்பட பலரது அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான இவர் வெள்ளவத்தை மயூராபதி ஆலயத்தில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவில் கலந்து சிறப்பிக்கின்றார்.

இலங்கை மக்கள் பொருளதார ரீதியில் பாதிக்கப்பட்;டு துயருற்ற நிலையில் அவர்களுக்கு அருள் வேண்டியும், ஆசி வேண்டியும் தமிழகத்தில் யாகங்கள் நடத்தியவர். பழனி புலிப்பாணிச் சித்தருடன் இணைந்து கதிர்காமத்திலும், அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளுடன் இணைந்து மட்டக்களப்பிலும் யாகபூஜைகளில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். தொடர்ந்தும் இவர் கண்டி, கதிர்காமம், நுவரெலியா, மாத்தளை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்கின்றார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயபணிகள் செய்து வருகிறார், கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து பல வறிய மாணவ, மாணவிக்கு பட்டபடிப்பு வரை படிக்க வைத்துள்ளார், தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் திருத்தலங்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்து உள்ளார், ஆதீனங்கள், மடங்கள், மடாதிபதிகள் பிரச்சனைகளில் பங்கு கொண்டு நிவர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X