2025 ஜூலை 19, சனிக்கிழமை

செல்பியால் சிக்கல்

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுக்கட்டாக இருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களுடன் பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தார் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஒருவர், அவரின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் அவர்கள் வீட்டில் தரையில் கட்டுக்கட்டாக பரப்பி வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து விளையாடியுள்ளனர்.

இந்த புகைப்படம் எப்படியோ லீக் ஆகி இணையத்தில் வைரலானது.   அந்த புகைப்படத்தில் மொத்தம் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் 27 உள்ளன. அதன்படி, பணத்தின் மதிப்பு ரூ.14 .லட்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த பணம் காவலர் ரமேஷ் இலஞ்சமாக பெற்ற பணம் என்ற புகார் எழுந்துள்ள நிலையில், விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மேலும், சர்ச்சையில் சிக்கிய ரமேஷ் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X