A.K.M. Ramzy / 2021 மார்ச் 16 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தஞ்சாவூர்,
‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்குத் தொடுத்தால் சந்திக்க தயார்’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலை திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வானில் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தல் பிரசாரம் செய்யலாம். தவறு இல்லை. அதை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் முதலமைச்சராக இருக்கக் கூடிய பழனிசாமி வாய்க்கு வந்தபடி சொல்வது அத்தனையும் பொய். பொய்யை சென்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணத்துக்கு கலைஞரும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம் என சொல்லி இருக்கிறார்.
10 ஆண்டு காலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா உடல் நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவரது உடல்நலத்தை பற்றி கூட வெளியே சொல்லமுடியாத ஒரு ஆட்சியை நடத்தி கொண்டு இருந்தவர்கள் இவர்கள்.
நான் தொடர்ந்து பலமுறை சுட்டி காட்டி இருக்கிறேன். ஏன் தேர்தல் அறிக்கையில் கூட சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்தபிறகு எடுப்போம் என்று உறுதிமொழி தந்து இருக்கிறோம். அந்த பயம் காரணமாக இந்த கூற்றை கூறியிருக்கிறார்.
இது உண்மை என்றால் 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?. ஸ்டாலின் தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் அல்லவா?.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago