A.K.M. Ramzy / 2021 ஜனவரி 27 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி:
தலைநகர் டில்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என டில்லி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையை சுற்றிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தலைநகர்டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.மேலும், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு கருதி கிரே லைன் மெட்ரோ ரெயில் நிலையம், ஜமா மஸ்ஜித் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரெயில் நிலைய வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026