2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

தேர்தல் முடிவுகள் இன்று 2 மணிக்குள் வெளியாகும்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 2 மணிக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இந்த இருகட்டத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மொத்தமுள்ள 153 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 8 இடங்களையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இதேபோல் 1,421 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 266 இடங்களில் திமுக- 198, அதிமுக - 28, காங்கிரஸ்- 7, இந்தியக் கம்யூனிஸ்ட்- 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 2, தேமுதிக - 1 பாமக உள்ளிட்ட மற்றவை 29 இடங்களைக் கைப்பற்றின.

9 மாவட்டங்களில் இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவராமல் உள்ளன. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .