Freelancer / 2022 மே 18 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளை திறக்க உத்தரவிட கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் திகதியன்று மனு தாக்கல் செய்தார்.
இந்து கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்பு உள்ளதால் அந்த அறைகளை திறந்து சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த 12 ஆம் திகதியன்று, நீதிபதிகள் டி.கே. உபாத்யாய் மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது பருவ இதழில் தாஜ்மகால் அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளை பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago