A.K.M. Ramzy / 2021 நவம்பர் 08 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராய்ப்பூர்:
நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் சத்தீஷ்கர் மாநிலத்தில் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக, சுக்மா மாவட்டம் லிங்கம் பள்ளி என்ற இடத்தில் துணை இராணுவ படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் தங்கியுள்ளனர். இந்த முகாமில் இரவு நேரத்தில் பலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பணியில் இருந்த ஒரு வீரர் தனது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் 4 வீரர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர்,அவரை உயர் அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என்று உயர் அதிகாரிகள் கூறினார்கள். காயம் அடைந்த வீரர்கள் உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மத்திய படைபொலிஸார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026