2025 மே 12, திங்கட்கிழமை

திருமணமான மறுநாளே போர் முனைக்கு கிளம்பிய ராணுவ வீரர்

Editorial   / 2025 மே 12 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பிஹாரின் பக்​ஸர் மாவட்​டம் நந்​தன் கிராமத்​தைச் சேர்ந்த சிப்​பா​யான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வரு​கிறார். அவர் தனது திரு​மணத்​திற்​காக விடுப்பு எடுத்​துக் கொண்டு பக்​ஸர் வந்​திருந்​தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (09) திருமணம் முடிந்​தது.

இதனிடையே, பஹல்​காம் தாக்​குதலுக்கு பின் எல்​லை​யில் பாகிஸ்​தானுடன் போர் தொடங்கி விட்​டது. இதனால், இந்​திய ராணுவம் தனது வீரர்​களின் விடுப்பை ரத்து செய்​து, உடனடி​யாக பணிக்கு திரும்​பு​மாறு அறி​வுறுத்​தி​யது. இதை ஏற்று திரு​மண​மான மறு​நாளி​லேயே பணிக்கு கிளம்பி விட்​டார் தியாகி யாதவ்.

அவரது பெற்​றோரும் தாய்​நாட்​டிற்கு சேவை செய்​வது முக்​கி​யம் எனக் கூறி அனுப்பி வைத்​துள்​ளனர். புது மனை​வி​யான பிரியா யாத​வும் தன் கணவர் தியாகி யாதவை பெரு​மிதத்​துடன் வழியனுப்பி வைத்​துள்​ளார். இந்த நெகிழ்​வான சம்​பவம் வட மாநிலங்​களின் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

HinduTamil2ndMay

இதில் பிரியா யாதவ் கூறும்​போது, ‘எனது கணவர், தாய்​நாட்​டின் மேல் பாச​மும் பற்​றும் நிறைந்​தவர். உறு​தி​யான எண்​ணம் கொண்​ட​வர், திரு​மண​மான மறு​நாளே பாகிஸ்​தானை தோல்​வி​யுறச் செய்​யப் போர்​முனைக்​குச் சென்​று​விட்​டார். நான் எதைப்​பற்​றி​யும் சிந்​திக்​காமல் அவர் தன் கடமையை செய்​வதற்​காகப் பெரு​மை​யுடன் வழியனுப்பி வைத்​தேன்’ என்​றார்.

தியாகி யாத​வின் திரு​மணத்​துக்கு கூடிய​வர்​களை விட அதி​கப்​படி​யானோர் இணைந்து அவரை வழியனுப்பி வைத்​துள்​ளனர். அவருடைய குடும்​பத்​தில் பலரும் ராணுவத்​தில் பணி​யாற்​றிய​வர்​கள்.

அவரது உறவினர் ஓம் பிர​காஷ் யாதவ் ஜம்மு காஷ்மீரின் குப்​வாரா மாவட்​டத்​தில் பணி புரி​கிறார். தாயார் மங்​கள் யாத​வும் ராணுவத்​தில் உள்​ளார். பிஹாரின் இந்த யாதவ் குடும்​பம் மூன்று தலை​முறை​களாக நாட்​டிற்​கு சேவை செய்​து வரு​வது பெரு​மைக்​குரிய​தாக அமைந்​துள்​ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X