Editorial / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

- வ.சக்தி
இந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசை நிகழ்சியும்” மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டிலேயே “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும் என்னும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது
இது தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நிலையத்தின் பிரதான இணைப்பாளர் வி.கே.சுரேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(08) அன்று நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
மகா சிவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக எதிர்வரும் 17 ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் மாபெரும் தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும் என்னும் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அதில் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனும் அவரது மகள் உத்தரா உன்னிகிருஷ்ணன் ஆகிய இருவரும் பங்கேற்கவுள்ளனர்.
“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” என்னும் இசை நிகழ்ச்சிக்கு ஆன்மீக பேச்சாளர் இந்தியா திருவண்ணாமலையில் இருந்து தெய்வீக சகோதரி உமா கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இதனோடு இணைந்தாக எதிர்வரும் 14, 15 மற்றும் 16 திகதிகளில் கல்லடி கடற்கரையில் 12 ஜோதிலிங்க தரிசன கண்காட்சி இடம் பெற்று அதனைத் தொடர்ந்து 17 ஆம் திகதி பி.ப 6.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரைக்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” நடைபெறும். .
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான தலைமையகம் ராஜஸ்தானிலும், உலகம் முழுவதும் 5000 கிளைகளைக் கொண்டுள்ளதுடன் 147 நாடுகளில் அதன் கிளைகள் வியாபித்துள்ளதுடன், இலங்கையில் அதிகமான மாவட்டங்களில் கிளைகள் நிறுவப்பட்டு தெய்வீக செயற்பாடுகள் மற்றும் சமூக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 25 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் தமது சேவையை மேற்கொண்டு என அவர் இதன்போது தெரிவித்தார்.
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago