2025 ஜூலை 21, திங்கட்கிழமை

திரைப்படம் பார்த்துவிட்டு காதலன் மீது பொலிஸில் புகார்

Ilango Bharathy   / 2023 மே 24 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுவதியொருவர்  `தி கேரளா ஸ்டோரி` என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தன் காதலன் மீது  பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கஜ்ரானா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், முகமது பைசன் கான் என்ற நபரும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல முறை பாலியல் உறவிலும் இருந்த நிலையில், சமீப காலமாக அந்த பெண்ணை காதலன் நீ மதம் மாறினால் தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன் என வற்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  

 இது அப் பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது வீட்டாரிடம் கூறினால் தன் மீது அவர்கள் ஆத்திரமடைவார்கள் என பெண் பயத்துடன் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் அப் பெண் திரையரங்கில்‘ தி கேரளா ஸ்டோரி‘ படத்தை பார்த்துள்ளார்.

அதன் பின் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  அப்பெண் தனது காதலனிடம் சென்று தன்னால் மதம் மாற முடியாது என்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை காதலன் பைசன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த பெண், பொலிஸ் நிலையத்தில் தனது காதலன் மீது புகார் அளித்துள்ளார்.

காதலன் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துகிறார், உளவியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார் எனவும் அக் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .