2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திறந்த வெளிகளில் திருமணம் நடத்த அனுமதி

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அங்கு பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திறந்த வெளிகளில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இடத்தின் பரப்பளவை பொறுத்து திறந்த வெளிகளில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்த, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி அளிக்கலாம் என உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, உள்ளக அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மாநிலங்களில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .