Freelancer / 2023 மே 02 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி
கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டதாக ’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் டிரெய்லர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை சுதிப்தோ சென் எழுதி இயக்கியுள்ளார்.
எதிர்வரும் 5ஆம் திகதி இந்த படம் வெளியாகும் நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில், தி கேரள ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தியுள்ளது
52 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
01 May 2026