Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுக் கடை உரிமையாளர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசாங்கத்தின் அனுமதியை மீறி அதிக அளவிலான பட்டாசுகளை வைத்திருந்தமை, விபத்துக்கான காரணமானவர், மரணம் ஏற்படும் என தெரிந்தே அலட்சியமாக இருந்தது என்பன உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில்உள்ள பட்டாசு கடையில் செவ்வாய்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடைக்கு அருகே இருந்தவர்கள் தீயில் சிக்கினார். மேலும் இந்த தீ விபத்தின் போது பட்டாசுக் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் அருகருகே இருந்த ஜவுளிக்கடை, இனிப்புக்கடை, டீக்கடை, செல்போன் கடைகளில் கடைகளில் தீ மளமளவென பரவத் தொடங்கியது.
பேக்கரியில் இருந்தவர்கள் மீது பட்டாசு வெடித்து சிதறியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில்பொலிஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.15 வயது சிறுவனை தேடி வந்த நிலையில் இடிபாடுகளிடையே படுகாயங்களுடன் சடலமாக சிறுவன் மீட்கப்பட்டான். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
28 minute ago
2 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
15 Aug 2025