2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தீவிரம் அடைந்துவரும் கொரோனா; மீண்டும் பொது முடக்கம்?

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அண்மைக்காலமாகக்  கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகின்றது.

குறிப்பாக இந்தியாவில் நேற்றைய தினம் மாத்திரம்  7,633 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 10,542 ஆகக்  கொரோனாப்  பாதிப்பு உயர்ந்துள்ளது.

அதே சமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின்  எண்ணிக்கையும் 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாது கடந்த சில நாட்களில் கொரோனாவினால் 38 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகளின்  எண்ணிக்கை 5,31,152 லிருந்து 5,31,190 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது  4,48,34,859 இல் இருந்து 4,48,45,401 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .